திருப்பூர்: அரசு ஆஸ்பத்திரியில் ‘லிப்ட்’ பழுதால் 5 பேர் சிக்கி தவிப்பு

திருப்பூர்-தாராபுரம் சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு திருப்பூர் சுற்றுவட் டார பகுதியில் இருந்து தினமும் ஏராளமானோர் சிகிச்சைக் காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மருத்துவமனை யில் 4 தளங்களுடன் பிரசவ வார்டு செயல்படுகிறது. இங்கு மருத்துவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பார்வையாளர்கள் சென்றுவர மின்தூக்கி (லிப்ட்) வசதி உள்ளது. இதைதொ டர்ந்து நேற்று மாலை திடீரென இந்த மின் தூக்கியில் பழுது ஏற்பட்டது. இதில் பெண்கள் உட்பட 5 பேர் சிக்கி தவித்தனர். தொடர்ந்து மின்தூக்கியில் இருந்தவர்கள் அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்திய சிறிது நேரத்தில் மின்தூக்கியை சரி செய்யும் பணியாளர்கள் பழுதை சரி செய்தனர். இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக வெளியேறினர். இதனால் மருத்துவம் னையில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி