மேலும் குடோனிலிருந்து அதிகபட்சமாக புகை வெளியேற துவங்கிய அந்த பகுதி முழுவதும் புகையால் சூழ்ந்தது. இதனைத் தொடர்ந்து அச்சமடைந்த அப்பகுதியினர் திருப்பூர் வடக்கு தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த திருப்பூர் வடக்கு தீயணைப்புத்துறையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
தோல்வியுடன் ஓய்வு பெற்றார் WWE ஜாம்பவான் ஜான்சீனா