உர மேலாண்மை விழிப்புணர்வு முகாம்

பொங்கலூரில் சமச்சீர் உர மேலாண்மை குறித்த விழிப்பு ணர்வு முகாம் நடந்தது. இதில், பொங்கலூர் வேளாண் அறி வியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன், வேளாண் விரிவாக்க விஞ்ஞானி பத்மா, தொழில்நுட்ப வல்லு நர்கள் சுதா, தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டு விழிப் புணர்வை ஏற்படுத்தினர். முகாமில் விவசாயிகளுக்கு மண் பரிசோதனை மூலம் மண்ணில் உள்ள சத்துக்களின் நிலையை அறிந்து, பயிர்களின் தேவைக்கேற்ப தழை, மணி, சாம்பல் சத்துக்களோடு மண் வளத்தை பாதுகாக்க தொழு உரம், பசுந்தழை உரம் மற்றும் இயற்கை உரங்களை பயன் படுத்த வேண்டிய அவசியம் குறித்து விவசாயிகளுக்கு அறி வுறுத்தப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி