அடையாள எண் பெறுவதற்கு விவசாயிகள் 15-ந் தேதி வரை வாய்ப்பு

திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதார் எண் போன்ற தனித்துவமான அடையாள எண் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பி.எம். கிசான் திட்டத்தின் 21-வது தவணை ஊக்கத்தொகை பெற இது அவசியமாகும். அனைத்து கிராமங்களிலும் வேளாண்மை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் முகாம் நடத்தி வருகின்றனர். பொது சேவை மையங்களிலும் இலவசமாக பதிவு செய்யலாம். இதுவரை அடையாள எண் பெறாத விவசாயிகள், தங்கள் ஆதார் நகல், நில ஆவணங்கள், ஆதார் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுடன் வருகிற 15-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி