திருப்பூர்: 28-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28-ம் தேதி கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலை 10.30 மணிக்கு நடக்கிறது. கூட்டத்துக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்குகிறார். அனைத்து துறை அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்க வேண்டும். கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கான மனுக்கள் பெறப்படும். அதன்பிறகு பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களின் ஒரு சங்கத்துக்கு ஒருவர் வீதம் கோரிக்கையை தொகுத்து கலெக்டரிடம் தெரிவிக்கலாம். இந்த தகவலை கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி