குறைந்த விலைக்கு புதிய செல்ஃபோன் கிடைப்பதால் தொழிலாளர்களும் அதனை நம்பி வாங்கி செல்கின்றனர். ஆனால் இந்த போன்கள் அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டவை அவற்றின் உள்ளே பழைய பயன்படுத்தப்பட்ட பொருட்களை வைத்தும் தரமற்ற பொருட்களை வைத்தும் தயாரிக்கப்பட்டவையாக உள்ளது. மேலும் கேமரா உள்ள இடத்தில் வெறும் கண்ணாடி மட்டும் வைத்து லென்ஸ் இல்லாமலும் ஆயிரம் ரூபாய் அளவில் தயாரிக்கப்பட்ட மலிவான தரம் குறைந்த போலி செல்போன்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த செல்போன் ஒன்றை வாங்கிய வடமாநில தொழிலாளி கைதவறி செல்போனை உடைத்த நிலையில் அதனை சரி செய்ய மொபைல் போன் கடையை அணுகிய போது போலியான போன் என தெரிய வந்தது. மேலும் இதுபோல தொடர்ந்து போலி போன் விற்பனை திருப்பூரில் நடைபெற்று வருவதும் தெரியவந்துள்ளது.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் மருத்துவ, ரத்ததான, சட்ட ஆலோசனை முகாம்