திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அதிமுக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆதரவு தெரிவித்தார். ஆளே இல்லாத கட்சி கூட பொதுக்கூட்டம் நடத்தினால் கூட்டம் வரும் என தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்தை அவர் விமர்சனம் செய்தார். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.