திருப்பூர் தோட்டத்துப்பாளையத்தை சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் நிரூபன் சக்கரவர்த்தி, தனது தாயார் மீனாட்சி (60) திடீர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததை அடுத்து, அவரது உடலை அரசு மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்கியுள்ளார். நேற்று அதிகாலை வீட்டில் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.