இதுகுறித்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியத்தை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை ஜே.எம்.3 கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. கொடுங்காயம் ஏற்படுத்திய குற்றத்துக்கு பாலசுப்பிரமணியத்துக்கு 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து மாஜிஸ்திரேட்டு முருகேசன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ரேவதி ஆஜராகி வாதாடினார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிவு