இந்த பள்ளத்தை சீரமைக்காததால் பெரிதாகி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தாக உள்ளது. இரவு நேரங்களில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் பள்ளத்தில் விழுகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழும் வாய்ப்பு உள்ளது. மழைக்காலங்களில் பள்ளம் இருப்பது தெரியாத அளவிற்கு மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த சாலையின் அருகே உள்ள பாதாள சாக்கடை மூடியும் பாதி திறந்த அளவில் உள்ளது. இதனால் அந்த சாலையில் ஓரமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழும் வாய்ப்பு உள்ளது.
இந்த சாலை போக்குவரத்து நிறைந்த சாலை என்பதால் பள்ளம் மற்றும் பாதாள சாக்கடை திறந்துள்ளதால் அதில் நிலைதடுமாறி கீழே விழுபவர்கள் மீது பின்னால் வரும் வாகனங்கள் மோதும் வாய்ப்பு உள்ளது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் இவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.