திருப்பூர் கரட்டாங்காடு பகுதியில் வசிக்கும் 45 வயது பனியன் நிறுவன டிரைவர், தனது 13 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், தெற்கு அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் தந்தையைக் கைது செய்தனர்.