திருப்பூர்: நேரப்பிரச்சினை தொடர்பாக மினி பஸ் கண்ணாடி உடைப்பு டிரைவர் கைது

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு, இரண்டு தனியார் மினி பேருந்து ஓட்டுநர்களுக்கு இடையே நேரப் பிரச்சனை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மோதலின் போது, தினகராஜ் (40) என்பவர் மற்றொரு பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஓட்டுநர் காளிதாஸ் (32) அளித்த புகாரின் பேரில், திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தினகராஜ்ஜை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி