திருப்பூர்: பெண்ணை தாக்கிய டிரைவர் கைது

கும்பகோணம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தரராஜன்(வயது 30). இவர் திருப்பூர் கருமாரம்பாளையம் பகுதியில் தங்கி டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சுந்தரராஜன் அதே பகுதியை சேர்ந்த பெண்ணிடம் தகாத வார்த்தையால் பேசி தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து அந்த பெண் கொங்குநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சுந்தரராஜனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி