திருப்பூர்: காதுகேளாதோர் நலச்சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி

திருப்பூர் மாவட்ட காதுகேளாதோர் நலச் சங்கம் சார்பில் காதுகேளாதோருக்கான 2-வது மாவட்ட அளவிலான செஸ் போட்டி நேற்று திருப்பூர்-தாராபுரம் சாலையில் உள்ள அரண்மனைப்புதூர் அரசு பள்ளியில் நடைபெற்றது. இந்த போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெண்கள் உட்பட 26 பேர் கலந்து கொண்டனர். 13 குழுக்களாக பிரிக்கப்பட்டு தொடர்ந்து 5 சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றது. வாய் பேசமுடியாத, காதுகேளாதோர் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியின் விதிமுறைகள் அவர்களுக்கான சைகை மொழியில் செய்து காண்பிக்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து முதல் பரிசாக ரூ.2,000, 2-ம் பரிசாக ரூ.1,500, 3-ம் பரிசாக ரூ.1,000 மற்றும் 4-ம் பரிசாக ரூ.500 வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி