திருப்பூர்: சாமியாட காசு கொடுத்தோமா? ஆர்.ஜே. பாலாஜி பரபரப்பு பேட்டி

திருப்பூரில் கருப்பு பட இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். தியேட்டரில் சாமி ஆடுவதற்கு தயாரிப்பு நிறுவனமே பணம் கொடுத்து ஆள் அனுப்பியுள்ளதா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், படக்குழுவால் அவ்வளவு பட்ஜெட் செலவு செய்து ஆள் அனுப்ப முடியாது என்றும், அது படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக இருக்கும் என்றும் கூறினார். மக்களே இந்தப் படத்தை தங்களுடைய படமாக நினைத்து கொண்டாடுவதுதான் இதை மிகவும் சிறப்பானதாக மாற்றியிருக்கிறது என்றும் ஆர்.ஜே. பாலாஜி கூறினார்.

தொடர்புடைய செய்தி