திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா விண்ணப்பங்கள், மகளிர் உரிமைத் திட்ட மேல்முறையீடுகள், ஊரக வளர்ச்சிப் பணிகள் மற்றும் இழப்பீடு தொடர்பான விவரங்கள் பரிசீலிக்கப்பட்டன. திட்டப் பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர அமைச்சர் அறிவுறுத்தினார்.