திருப்பூர்: கோயில்வழி பஸ் நிறுத்தத்தை இடமாற்றம் செய்ய முடிவு

திருப்பூர் கோவில்வழி பஸ் நிலையம் அருகில் உள்ள நுண் உரம் செயலாக்க மையத்தை கலெக்டர் மனிஷ் நாரணவரே நேற்று ஆய்வு செய்தார். உலர்ந்த குப்பையை தரம் பிரிக்கும் எந்திரத்தின் செயல்பாட்டையும் அவர் பார்வையிட்டார். ஆதிதிராவிடர் பள்ளி முன்புறம் பயணிகள் நின்று பஸ் ஏறி இறங்குவதால், வீரபாண்டி சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறி, கோவில்வழி பஸ் நிறுத்தத்தை இடமாற்றம் செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இந்த ஆய்வில் மாநகராட்சி ஆணையாளர் அமித் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி