ஓய்வுக்கால நிதி வழங்கக்கோரி கூட்டுறவு பணியாளர்கள் மனு

திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இணைப்பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவு நிறுவனப் பணியாளர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கூட்டுறவு சங்கத்தின் இணைப்பதிவாளர் பிரபு தலைமை தாங்கினார். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர். பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்றோர் தங்களுக்கு ஓய்வுகால நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இணைப்பதிவாளரிடம் மனு அளித்தனர். இக்கூட்டத்தில் திருப்பூர் சரக துணைப்பதிவாளர் பிரபா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி