காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்

மகாத்மா காந்தியின் பெயர் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. திட்டத்திற்கு மீண்டும் காந்தியின் பெயரை சூட்ட வேண்டும், அறுவடை காலத்தில் வேலை திட்டத்தை நிறுத்தக்கூடாது, ஆண்டுக்கு 150 நாட்கள் வேலை வழங்கி குறைந்தபட்சம் ரூ. 400 வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி