இதனைத் தொடர்ந்து முகேஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 11ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு துவங்கியுள்ளது. கையில் கட்டுடன் இந்தச் செய்முறைத் தேர்வில் பங்கெடுக்க முடியாது என மாணவன் முகேஷ் பள்ளியில் தெரிவித்துள்ளார். பள்ளி நிர்வாகம் இதுகுறித்து அரசு மருத்துவமனையில் மருத்துவச் சான்று பெற்றுத் தருமாறு அறிவுறுத்தியுள்ளனர். பள்ளியில் கொடுப்பதற்காக மருத்துவச் சான்று வேண்டி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த வாரம் ஐந்தாம் தேதி மனுவைக் கொடுத்து பதிவு செய்துள்ளார்.
மனுவைக் கொடுத்து ஆறு நாட்கள் ஆகியும், "இன்று போய் நாளை வா" என்று சொல்வது போல மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அலைக்கழித்து வந்துள்ளனர். இந்நிலையில் 12ஆம் தேதி முகேஷ் தனது பள்ளியில் செய்முறைத் தேர்வு உள்ளது, எழுத வேண்டும் என்று கூறியும், மருத்துவமனையில் ரெசிடென்ட் மெடிக்கல் அலுவலர் "இன்று விடுமுறை, நாளை காலை வாருங்கள்" என்றும் கூறியுள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முகேஷ் தனது தந்தை கொண்டசாமி ஆகியோர் மருத்துவமனையில் ஒரு வாரகாலமாகியும், இதுவரை மருத்துவ அலுவலர்கள் மருத்துவச் சான்று வழங்குவதற்காக தங்களை அலைக்கழிப்பதாக வேதனையுடன் கூறி வெளியில் ச