தனால் இந்த சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். நடந்து செல்லும் பொதுமக்களுக்கும் நடைபாதை இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் வாகன ஓட்டிகள் நெருக்கடி இல்லாமலும் விபத்தினை தவிர்த்தும் பயணிக்க முடியும். மேலும் அந்த பகுதியில் கடைக்கு முன்பாக வாகனத்தை நிறுத்துவதற்கு தனி வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தி சாலையில் வாகனங்கள் நிறுத்தி இடையூறு ஏற்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும்.
இதுகுறித்து வியாபாரிகள் மற்றும் கட்டிட உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டும். அந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில் எவ்வித அடையாளங்கள் இல்லாததால் வேகத்தடை தெரியாமல் வாகன ஓட்டிகள் விழுந்து விபத்துகள் ஏற்படுகிறது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.