திருப்பூர்: சாலை விபத்துகளை தடுக்க விழிப்புணர்வு கலெக்டர் உத்தரவு

திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும். 

நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட்பெல்ட் அணிந்து பயணிக்க வேண்டும். சாலைகளின் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு விளம்பர பதாகைகள் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் வாகன ஓட்டிகள் அறியும் வகையில் வைக்க அறிவுறுத்தப்பட்டது. சாலைவளைவுகள், சந்திப்புகள், குறுகிய சாலைகள், போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்களில் அதிவேகம் காரணமாக விபத்துகள் அதிகம் நடக்கிறது. வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் சாலை பாதுகாப்பு குறித்து தொடர் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளால் குடும்பமே பாதிக்கப்படுவது குறித்தும் தெரிவிக்கப்பட்டது. 

விபத்தில்லா மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற கலெக்டர் அறிவுறுத்தினார். முன்னதாக சட்டம், ஒழுங்கு பராமரிப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிறிஸ் அசோக், துணை போலீஸ் கமிஷனர்கள் ராஜராஜன், உதவியாளர் (பொது) மகாராஜ், உதவி ஆணையாளர் (கலால்) உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி