பின்னர் அவினாசி தாலுகா ராக்கியாபாளையத்தில் வீட்டுமனைப் பட்டா மற்றும் புதுப்பாளையம் ஊராட்சியில் வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்தார். பெருமாநல்லூர் சந்தைத் திடலில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம், முதல்வர் மருந்தகம் மற்றும் ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
இதுபோல் ஊத்துக்குளி ஒன்றியம், வள்ளிபுரம் ஊராட்சி, காரிங்கராயன்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மதிய உணவுத் திட்டம், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். குன்னத்தூர் பேரூராட்சி செங்காளிபாளையத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவது தொடர்பாகவும், ஊத்துக்குளி ஒன்றியம் எடையபாளையம் ஊராட்சி ஏ. தொட்டியபாளையத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, அவினாசி தாசில்தார் சந்திரசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், ரமேஷ் (அவினாசி), அனார்கலி, வேலுசாமி (திருப்பூர்), சரவணன் (ஊத்துக்குளி) மற்றும் உதவிப் பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.