திருப்பூர்: 5,186 பேருக்கு கலைஞரின் கனவு இல்லம்; கலெக்டர் தகவல்

ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுதுபார்த்தல் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. 

குடிசை இல்லாத தமிழகம் என்ற இலக்கை அடைவதற்காக கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் ஒரு வீட்டுக்கு ரூ. 3½ லட்சம் வழங்கப்படுகிறது. அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு தரவுத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியுடையவர்கள். அவர்கள் வீட்டுத் தளத்துக்கான பட்டா அல்லது உரிமை ஆவணத்தை வைத்திருந்தால் வீடு வழங்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்ட இலவச வீட்டுமனை வழங்கப்படும். 

திட்டத்தின் 360 சதுர அடியில் வீடு கட்டுவதற்கும், அதில் 300 சதுர அடி ஆர்.சி.சி. கூரையால் மூடப்பட்டிருக்கும். மீதம் உள்ள 60 சதுர அடி ஆர்.சி.சி. அல்லது வேறு எந்த வகையான கூரையாகவும் இருக்கலாம். திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக 5 ஆயிரத்து 186 பேருக்கு ரூ. 105 கோடியே 36 லட்சம் மதிப்பில் கலைஞரின் கனவு இல்ல திட்டம் மற்றும் ஊரக வீடுகள் பழுதுபார்த்தல் திட்டப் பணிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி