திருப்பூரில் வடமாநிலத்தவர்கள் போராட்டம்

திருப்பூர் சிறு பூலுவபட்டியில், அம்மன் கல்யாண மண்டபம் அருகே தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டு வந்ததால் ஏற்பட்ட துர்நாற்றம் மற்றும் சுகாதாரப் பிரச்சினையைக் கண்டித்து, அப்பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணிபுரியும் 300-க்கும் மேற்பட்ட வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். "Clean karo! Clean karo!" என கோஷமிட்ட தொழிலாளர்களை அகற்ற முயன்றபோது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் கைது செய்யப்பட்டனர். அப்பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி