திருப்பூர்: செல்போன் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

திருப்பூர் பெரியார்காலனியை அடுத்த சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவர் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை தினேஷ் அருகில் உள்ள பேக்கரிக்கு டீக்குடிக்க சென்றார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள் மற்றும் வீட்டின் உள்ளே இருந்த 2 செல்போன்கள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தினேஷ் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளின் அடிப்படையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர் மகேந்திரன் (வயது 35) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து செல்போன்கள் மற்றும் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி