திருப்பூர் பள்ளக்காட்டுபுதூர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியதில், நல்லூரில் இருந்து முத்தணம்பாளையம் செல்லும் சாலையோரம் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து விபின், விவேக் உட்பட 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் இருந்து ரூ. 25 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.