திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே கொடியம்பாளையம் நால்ரோடு - செங்கப்பள்ளி சாலையில் உள்ள மணியோசை நகர் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும் சரி செய்யப்படாததால் குடிநீர் வீணாகி வருகிறது. இது குறித்து மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும், உரிய நடவடிக்கை எடுக்க தாமதம் ஏற்படுவதாக உள்ளூர் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுவது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.