திருப்பூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் மோப்ப நாய் மற்றும் நிபுணர் குழுவுடன் நீதிமன்ற வளாகத்தில் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படாததால், இந்த மிரட்டல் ஒரு புரளி என தெரியவந்தது. இது குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி