திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது லிடன் மியா (43) என்பவருக்கு, திருப்பூர் 2-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. நல்லூர் மணியக்காரம்பாளையம் பகுதியில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி ரோந்து பணியில் ஈடுபட்டபோது நல்லூர் போலீசார் இவரை கைது செய்தனர்.