இதுபற்றி 15 வேலம்பாளையம் போலீசில் சங்கீதா அளித்த புகாரில், பா. ஜனதாவின் பிரசாரத்தின்போது கேள்வி கேட்ட தால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் எனது கடைக்கு வந்து தகாத வார்த்தைகளால் என்னை திட்டினர். சின்னசாமி என்ப வர் என்னை தாக்கினார். எனவே அவர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். சங்கீதா அளித்த புகாரின் பேரில் சின்னச்சாமி உள்ளிட்டவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.