கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்ட பணிகளின் செயல்பாடுகள் குறித்தும், நடப்பாண்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு நடந்தது. மகளிர் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அனைத்தையும் பொதுமக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு திட்டங்களை கொண்டு சேர்க்க அலுவலர்கள், பணியாளர்கள் முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும் என்றார். கூட்டத்தில் மகளிர் திட்டத் திட்ட இயக்குநர் சாம்சாந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்