திருப்பூர்: பணத்தை கண்டெடுத்து ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்

திருப்பூர் விஜயாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மதன், வளம் பாலம் அருகே சாலையில் கட்டு கட்டாக கிடந்த ₹5,64,000 பணத்தை கண்டெடுத்து திருப்பூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் கணேஷ்குமாரிடம் ஒப்படைத்தார். பணப்பைக்குள் இருந்த பணத்தை சோதனை செய்தபோது அதன் மதிப்பு தெரியவந்தது. நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மதனுக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி