ஈரோடு மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருப்பூர் மாவட்ட நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையை 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட மின்னணு முறையில் ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களை www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். விருப்பமுள்ளவர்கள் படிவங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து, வருகிற 17-ந்தேதி காலை 9 மணிவரை சமர்ப்பிக்கலாம்.