திருப்பூர் அருகே புதுப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த மாநகர் நல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன், ஆடு விற்பனைக்கு கொண்டு சென்ற விவசாயியிடம் புகை சான்றிதழ் இல்லை எனக் கூறி ₹200 லஞ்சம் வாங்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் மோகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.