இளைஞர் நீதிக்குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர் நியமனம்

திருப்பூர் மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் 2 சமூகப்பணி உறுப்பினர்கள் (ஒரு பெண் உட்பட) மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இது அரசு பணி அல்ல. விண்ணப்பதாரர்கள் குழந்தைகள் நலன் தொடர்பான துறைகளில் குறைந்தது 7 ஆண்டு அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் அல்லது குழந்தை உளவியல், மனநலம், சமூகவியல், சட்டம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது 35–65 இடையில் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் அல்லது https://dsdcpimms.tn.gov.in மூலம் பெற்று, மார்ச் 12 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி