அங்கன்வாடி ஊழியர்கள் நூதன போராட்டம்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ. 19,500 மற்றும் சமையல் உதவியாளருக்கு ரூ. 15,700 அடிப்படையில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. போராட்டம் இன்று 15-வது நாளாக தொடர்ந்த நிலையில், ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பே சமைத்து சாப்பிட்டு நூதன முறையில் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி