திருப்பூர்: தனியார் பார்களை நோக்கி படையெடுக்கும் மது பிரியர்கள்

வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் 31 டாஸ்மாக் கடைகள் மூட அடையாளம் காணப்பட்டு, படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. மே 12 அன்று 2 கடைகள் மூடப்பட்ட நிலையில், மே 13 அன்று பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள 2 கடைகள் உட்பட மொத்தம் 5 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் மது பிரியர்கள் அருகே உள்ள தனியார் பார்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி