திருப்பூர் - பாண்டியன் நகர் அருகே பொன்னம்மாள் நகரில் ஏற்பட்ட வெடி விபத்தால் பாதிப்படைந்த பகுதிகளை பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் கட்சி நிர்வாகிகளுடன் பார்வையிட்டார். பாதிப்படைந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெடி விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், நடந்த இச்சம்பவம் தமிழக காவல்துறையின் தோல்வியை காட்டுகிறது எனவும், பாஜக சார்பில் நடந்த இச்சம்பவத்திற்கு கண்டனத்தை பதிவு செய்கிறோம். பாதிப்படைந்தவர்களுக்கு பாஜக சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும். திருப்பூர் நகரின் பாதுகாப்பில் காவல்துறையினர் மேலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார். மேலும் மருத்துவமனையின் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளையும் , பாதிக்கப்பட்டவர்களையும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். உடன் மாநிலச் செயற்குழு உறுப்பினர் சின்னச்சாமி , மாவட்ட பொதுச் செயலாளர்கள் கே சி எம் பி சீனிவாசன் , பாலசுப்பிரமணி , நெருப்பெரிச்சல் மண்டல தலைவர் சுரேஷ் , மற்றும் மண்டல நிர்வாகிகள் மாநில மாவட்ட அணி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திமுக இளைஞரணி மண்டலக் கூட்டம் தயாராகும் உணவுகள்