திருப்பூர்: காவலர்கள் காலில் விழுந்து மரியாதை செலுத்திய பெண்; வீடியோ வைரல்

காவலர்கள் காலில் விழுந்து மரியாதை செலுத்திய பெண். வீடியோ வைரலாக பரவி வருகிறது. திருப்பூர் வித்யாலயம் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற பெண் ஒருவர் காவல்துறை வாகனத்தை கண்டதும் தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி விட்டு காவலர்கள் வாகனத்தை தொட்டு கும்பிட்டார். மேலும் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் நின்றிருந்த பகுதிக்கு சென்ற அவர் தனது செருப்பை கழற்றி விட்டு காவலர்களின் காலில் விழுந்து வணங்கி மரியாதை செலுத்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டார். இதனை சற்று எதிர்பாராத காவலர்கள் அதிர்ச்சி அடைந்து பின்னே சென்று திகைத்து நின்றனர். காவலர்களின் பணி பாராட்டத்தக்கது எனவும் அவர்களின் நேரம் காலம் பார்க்காத உழைப்பை போற்றும் வகையில் பெண் செய்த இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அங்கிருந்த நபர் வீடியோவாக எடுத்த நிலையில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி