திருப்பூர் மாநகராட்சி முன்பு ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என்றும், மத்திய அரசு இந்த உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. ஆர்ப்பாட்டத்தில், இருசக்கர வாகனத்தை பாடையில் ஏற்றியும், கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செய்வது போலவும் நூதனமாக சித்தரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.