இதன் அடிப்படையில் உறவினர்கள் ராஜன் பென்னியை காணவில்லை என வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். தொடர்ந்து திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் இருந்த அகன்ற சாக்கடை கால்வாயில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்றிரவு முதல் திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினர் மற்றும் வடக்கு போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சூசையாபுரத்திலிருந்து ராயபுரம் செல்லும் வழியில் உள்ள சாக்கடை கால்வாயில் அவரது இருசக்கர வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அவரது உடல் வேறு பகுதிக்கு அடித்துச் சென்றுஇருக்கலாம்என்ற அடிப்படையில்வடக்கு போலீசார்மற்றும்தீயணைப்பு துறையினர்தொடர்ந்துதேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.