திருப்பூர்: சொத்து பிரச்சனைக்காக தீர்த்து கட்டிய உறவினர்

திருப்பூரில் சொத்து பிரச்சனை தொடர்பாக உறவினரால் தொழிலதிபர் ஒருவர் ஹோட்டல் அறையில் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். பல்லடம் அடுத்த காமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த அமரன் என்ற தொழிலதிபர், திருப்பூர் பங்களா ஸ்டாப் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் 4வது மாடியில் 402 என்ற அறையில் தங்கியிருந்தார். அங்கு சொத்து பிரச்சனை தொடர்பாக பேசிய உறவினர், அவரை ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி