திருப்பூர் வடக்கு போலீசார் நேற்று (அக்.,3) சூசையாபுரம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வெளிநாட்டினர் சாயல் கொண்டு ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக வந்து கொண்டிருந்தார். அவரிடம் போலீசார் விசாரித்த போது அவர் நைஜீரியா நாட்டை சேர்ந்த இம்மானுவேல் நான்சோ (வயது 41) என்பதும், அவருடைய பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்தபோது அவை அசல் இல்லை என்றும், நாமக்கல்லில் இருந்து தினமும் திருப்பூர் வந்து பனியன் வியாபாரம் செய்து வருவதும் தெரிய வந்தது.
உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்ததாக அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.