திருப்பூர்: நடு ரோட்டில் பழுதாகி நின்ற அரசு பஸ்

கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசுப் பேருந்து, பழைய பேருந்து நிலையம் மேம்பாலம் அருகே திடீரென என்ஜினில் பழுது ஏற்பட்டு நடுரோட்டில் நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் இருந்தனர். மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையிலிருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு பழுது சரிசெய்யும் பணி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி