திருப்பூர் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு இன்று நடைபெற்றது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மூன்று தேர்வு மையங்களில் தேர்வு தடைபட்டதால் தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் திருப்பூர் தேர்வு மையத்திற்கு இந்த அறிவிப்பு தாமதமாக வந்ததால், 168 தேர்வர்கள் தொடர்ந்து தேர்வு எழுதி வந்தனர். தேர்வு முடிந்த இறுதி பத்து நிமிடத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்தனர்.