திருப்பூர்: டவர் மீது ஏறிய மாற்றுத்திறனாளி

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமையன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி வாரம் தவறாமல் வெள்ளிக்கிழமை அன்று மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த இரண்டு முகாம்களிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக கொங்கு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சரவணன்(54) தொடர்ந்து மாற்றுத்திறனாளி பயன்படுத்தும் வண்டி வழங்க வேண்டும் என மனுசெய்தும் தற்போது வரை வண்டி பெற முடியவில்லை. ஆனால் தனக்குப் பின் பலருக்கு வண்டி வழங்கும் அதிகாரிகள் இடம் கேட்டால் சரியாக பதில் வழங்கவில்லை. 

இந்த நிலையில் மூன்று ஆண்டுகளாக மனு கொடுத்து வரும் தனக்கு வண்டி வழங்கவில்லை என மனமுடைந்த மாற்றுத்திறனாளி சரவணன் இன்று திருப்பூர் கொங்கு மெயின் ரோடு டி.எம்.சி மூன்றாவது விதியில் உள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்ய போவதாக கூறி சத்தம் போட்டுள்ளார். பின்னர் தகவல் அறிந்து வந்த மனைவி மற்றும் உறவினர்கள் சமாதானம் செய்து கீழே வரவைத்தனர். பின்னர் அவரை அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி