இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் முன்னிலையில் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர். தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த சிவன்டியார்கள் கைலாய வாத்தியங்கள் இசைக்க, பெண்களின் கோலாட்டம், கும்மியாட்டத்துடன் தேர் ரத வீதிகளில் வலம் வந்தது. முன்னதாக விநாயகர் வீற்றிருந்த தேர் ரத வீதிகளில் வலம் வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து ரத வீதிகளில் வலம் வந்து தேர்நிலை சேர்த்தனர்.
தேர் ரதம் வரும் வீதிகளில் ஈஸ்வரன், பார்வதி மற்றும் அர்த்தநாரீஸ்வரர் வேடமிட்ட பக்தர்களும், சிவன் வேடமிட்ட சிறுவன் கையில் உடுக்கையுடனும், சைவ சமயத்தில் போற்றப்படும் சமயத்தை சேர்ந்தவர்களின் வேடமணிந்த பக்தர்களிடம் பொதுமக்கள் ஆசி பெற்றனர்.