சேவூர்: நாய்கள் கடித்து கன்றுகுட்டி சாவு

சேவூர் அருகே உள்ள குரும்பபாளையம் கோண வேலாங்காடு பகுதியை சேர்ந்த சிவராஜ் கால்நடை வளர்த்து வருகிறார். மாட்டு கொட்டகையில், திடீரென நேற்று அதிகாலை மாடுகளின் சத்தம் கேட்டு அங்கு வந்து பார்த்த போது, 1½ வயதான பசுங்கன்றை நாய்கள் கடித்து குதறியது தெரியவந்தது. இதில் பலத்த காயமடைந்த பசுங்கன்று உயிரிழந்தது. இதுபற்றி அறிந்த வருவாய்த்துறையினர், கால்நடை பராமரிப்புத்துறையினர் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி