திருப்பூர்: புகையிலை, மது விற்ற 8 பேர் கைது

திருப்பூர் வடக்கு போலீசார் ரெயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சூர்யா மதி (வயது 19), லட்சுமி டேக்கா(21) என்பதும், இவர்களிடம் 4 கிலோ 300 கிராம் புகையிலை பொருட்கள் இருப்பதும் தெரியவந்தது. 

மேலும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அம்பர் பாய்(20) என்பவரிடம் 750 கிராம் புகையிலை இருப்பதும், ஜெகநாத் பிஸ்வால்(28) என்பவரிடம் 1 கிலோ 900 கிராம் புகையிலை பொருட்கள் இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து உத்தர பிரதேசத்தை சேர்ந்த பரம்ஜீத் (24) என்பவரிடம் 2 கிலோ 200 கிராம் புகையிலை பொருட்கள் இருப்பதும் தெரியவந்தது. 

இவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து மொத்தம் 9 கிலோ 150 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் மதுவிற்றதாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அழகர்(வயது 29), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கருப்பையா(60) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். குன்னத்தூர் அருகே கஞ்சா விற்றதாக ஒடிசாவை சேர்ந்த கொரிபாலா பெகார (19) என்பவரை அவினாசி மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 140 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி